நான் வானத்தில் பறக்கிறேன்
மழைப் பொழிவாய் அவள் கண் வீச்சு,
மத்தாய்ப்பாய் அவள் கலகல சிரிப்பு,
குற்றாலச் சாரலாய் அவள் சாதுர்யப் பேச்சு,
குதூகலமாய் மேனி தழுவும் கை வீச்சு,
நான் செல்லுமிடமெல்லாம் என் காதலி;
கமலம்! என் கமலம்! செங்கமலம்!
என்னுள்ளம் நிறைந்த இன்னுயிர்க் காதலி;
நான் வானத்தில் பறக்கிறேன்!