முன்னால போற மச்சான்

முன்னால போற மச்சான்
கொஞ்சம் பொறு
நான் போறேன் முன்னாலே
வீதியெல்லாம் பசங்க
கேடித் தனம் பண்ணுவாங்க
நீ பின்னாலே வந்து விட்டால்
பார்த்துக் கொள்வாய் மச்சான்,

மச்சான்,,,,,
வாழைத் தண்டு மேனியில
பள பளக்கும் பட்டு உடுத்தி
வாராயோ என் மரிக்கொழுந்தே
நான் வாங்கி வந்த மல்லிகை பூ
சேலை ஏன் கட்டவில்லை/
கட்டி வந்தால் உன் அழகில்
என் கண்ணே படும் என்றா /

மரிக்கொழுந்து,,,,,,
அதை உடுத்தி எனைப் பார்த்தால்
நீ என்னையே தூக்கிடுவாய்
என் செல்ல மச்சான்
அவ்வளவு அழகு மச்சான்
அந்த மல்லிகைப் பூ சேலை
உடுத்தி வந்தால் கசங்கி விடும்
என் மனமும் கசங்கி விடும் உன்னாலே
ஆசையுள்ள அன்பு மச்சான் ,

மச்சான் ,,,,,,
வாசமுள்ள மல்லிகைப் பூ
வாங்கி வந்த சேலையிலே
மாட்டிக்கிட்டு தவிக்குமடி
என் நினைப்பு உன் அழகாலே
ஒய்யாரமாய் நீ கட்டி வர
ஓரக் கண்ணால் ரசிப்பேனடி
உன் அன்பு மச்சான் ,

மரிக்கொழுந்து,,,,,

தெரியாதோ உன் நினைப்பு
தெரிந்து தான் கட்டவில்லை
மல்லிகைப் பூ சேலை
காலம் வரும் நேரம் வரும் கட்டிடுவேன்
காளை நீயும் எனைக் கட்டிக் கொள்ள
பொறுத்தது போதும் மச்சான்
மாப்பிள்ளையாய் வந்து விடு

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Apr-16, 12:31 pm)
Tanglish : munnala pora machan
பார்வை : 140

மேலே