காமராசர்

புகழைத் தேடும்
மனிதர்களிடையில்
புது மனிதனாய்
திகழ்ந்தவர் !!!

பணப் படுக்கையைத்
தேடும்
மனிதர்களிடையில்
பக்குவமாய்
வாழ்ந்தவர் !!!

கல்விமான்களாய்
திகழ்ந்த
மனிதர்களிடையில்
கனிவோடு
வாழ்ந்தவர்!!!

வசதிகள் அவரை
வளைய வர
வறுமையை
விரும்பியவர்!!!

குடும்பத்திற்காக
மட்டும் உழைக்கும்
தலைவர்களிடையில்
என்
குடும்பம் என்
நாட்டிற்கு தடை என

தன் குடும்ப
வாழ்வை உதறித்
தள்ளிய
தன்னலமற்ற
தலைவராய்த்
திகழ்ந்தவர்!!!

கள்ள ஓட்டு
வாங்கி கட்சித்
தலைவர் பதவியை
பிடிக்கும் -இக்
காலத்தில்

முதல்வர் பதவியில்
இருந்து தானே
கீழிறங்கி மற்றோரை
பதவியில் அமர்த்தி
அழகு பார்த்த
அருமைத் தலைவர் !!!

பணப் பெட்டிகளை
வைக்க ஒரு
அறையை ஒதுக்கும்
இக்காலத் தலைவர்கள்
மத்தியில் -தன்

வாழ்விற்கு
தேவையான
அனைத்தையும்
ஒரேப் பெட்டியில்
வைத்து வாழ்ந்த
ஒப்பற்ற தலைவர்!!!

குட்டிக் கதைகள்
பேசி கோபுரத்தில்
அமரும்
தலைவர்களிடையில்
மெய்க்கண்டான்
புத்தக சாலையையே

தான்கற்கும்
கல்விக் கூடமாக
எண்ணி கல்வி
அறிவை
கைவசப் படுத்தியவர் !!!

குறைகள் பல பேசி
கொலைகள் பல செய்து
வாழும்
தலைவர்களிடையில்
எருமை மேய்த்தவனுக்கு
ஏட்டுக்கல்வியைக்
கற்க
இலவச உணவை ஊட்டி
இன்பம் கண்டவர் !!!!!

அவரைப் போன்றத்
தலைவர்களை பற்றி
ஏதோ நாம் கேட்டாவது
தெரிந்து கொள்ள வழி
இருந்தது -ஆனால்

இனி வரும் சந்ததிகள்
புகழ் பேசும்
தலைவர்கள்
மத்தியில்
வாழும்போது
என்ன ஆகுமோ?
தெரியவில்லை

அவர் வழியைத்
தேர்ந்தெடுப்பதே
இன்றையத் தலைவர்களுக்கு
கடினம் -பின்பு
அவரைப் போல்
வாழ்வது எப்படி ?

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (4-Apr-16, 8:33 am)
பார்வை : 131

மேலே