விழிகளின் அழகிய நிழல்களே

விழிகளின் அழகிய நிழல்களே

எதுக்காக பிறந்தேனோ?
உனை தேடி அலைந்தேனோ?
இருந்தாலும், நீ மறந்தே போயிருந்தாலும்,
கனவில் வாழ்ந்தால் போதும்!
மகிழ்ந்திடுவேனே நானும்!

இந்த காதல் ஊடல் உள்ளவரை
அட, நீயும் நானும்
வாழும்வரை,
கை கோர்த்து ஒன்றாய்,
நடப்போம் காதலே! (2)

வாழும் காதலே! எனை தேடும் காதலே!
என்னை வீழ்த்தும் காதலே! காதலே! (2)

எனை பார்க்கும் விழிகளே,
விழிகளின் அழகிய நிழல்களே!
நிழலில் தெரியும் காந்தளே!
காதலே! காதலே!

நல்லவனா? கெட்டவனா? தெரியலையே!
உன்னை தேடி வந்தாலும், வலியில்லையே!
இதழ்கள் ரெண்டும் சேந்தாலும் தவறில்லையே!
இப்படியே இருந்தாலும் பயமில்லையே!

வாழும் காதலே! எனை தேடும் காதலே!
என்னை வீழ்த்தும் காதலே! காதலே! (2)

எழுதியவர் : (4-Apr-16, 12:54 pm)
பார்வை : 1377

மேலே