கிராமிய மெட்டு

ஆ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கள்ளி என்ன கண்ணால்
கொல்ல தட்டுக் கெட்டுப்
போறேன் நானும்
தண்ணிப்பட்ட பாகா
மெல்ல...
பெ:என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கொள்ளி கண்ணு
ரெண்டால் மெல்ல
உருகித்தான் போறேன்
நானும் பத்த வச்ச
மெழுகா மெல்ல....
ஆ: ஊதக்காத்து வீசும்
நேரம் தேகம் எங்கும்
அனலா கூடும்...
புள்ள நீயும்
அணைச்சிகிட்டா
தண்ணிப்பட்ட தனல்தான்
நானும்
பெ: கண்ணும் வைக்கும்
காதும் வைக்கும்
பொல்லா சனம் ஏதும்
சொல்லும் மூணு
முடிச்சு போட்ட பின்னே
முழுசா தாறேன்
நானும் நானும்
ஆ: கண்ணு ரெண்டும்
மொசலா மேய
அருகம்புல்லா நானும்
சாய கம்மாகர ஓரம் வந்தா
கண்ணே நீயும் கொறஞ்சா
போவ?
பெ: பொல்லா எண்ண
ஆசக்காரா என்ன
மெரட்டும் மீசக்காரா
மஞ்சள் தாலி கட்டிய
பின்னே என்ன நீயும்
தூக்கிட்டு போடா
ஆ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கள்ளி என்ன கண்ணால்
கொல்ல தட்டுக்கெட்டு
போறேன் நானும்
தண்ணிப்பட்ட பாகா மெல்ல
பெ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கொள்ளி கண்ணு
ரெண்டால் மெல்ல
உருகித்தான் போறேன்
நானும் பத்த வச்ச
மெழுகா மெல்ல...
ஆ: தண்ணிக்கான
விக்கலது
டீய ஊத்த தீர்ந்திடுமா?
தேகம் கொண்ட மோகமது
கூடாவிட்டா ஓடிடுமா?
பெ: தாகமுன்னு
சொன்னதுக்கு தண்ணி
மொண்டு நான்
கொடுத்தேன்...
மோகமுன்னு
சொல்லுறியே
மனக்கண்ணால் என்ன
திண்ணுறியே
ஆ: பசிச்ச வயிறு சேராம
சோத்துக்கு ஏது
விமோசனம்? விரலும்
மெல்ல தீண்டாட்டி உன்
வயசுக்கு ஏது
விமோசனம்?
பெ: பண்பாடு மரபெனும்
பாட்டன் கொடுத்த சாசனம்
மறந்தும் மீறக்கூடாது
மனசில் வச்சி பூட்டனும்
ஆ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கள்ளி என்ன கண்ணால்
கொல்ல தட்டுக்கெட்டு
போறேன் நானும்
தண்ணிப்பட்ட பாகா மெல்ல
பெ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கொள்ளி கண்ணு
ரெண்டால் மெல்ல
உருகித்தான் போறேன்
நானும் பத்த வச்ச
மெழுகா மெல்ல
ஆ: வெளஞ்ச நெல்ல
அறுக்கையில கதிர்
மறுத்து சாய்ஞ்சிடுமா?
மொற மாமன் நான்தானே
மறுகா தொட்டா
கசந்திடுமா?
பெ: கதிர் முத்திய
பின்தானே களத்துமேடு
போகும்? சபைக்கூட்டிய
பின்தானே அறைய பூட்ட
வேணும்?
ஆ: போடு ஒரு கோடு
அத நானும் தாண்ட
மாட்டேன் காதலெனும்
ஸ்பரிசம் தாண்டி
துளியும் தீண்ட மாட்டேன்
பெ: மோகமென்னும் அனல
ஒனக்குள் நானும் தூண்ட
மாட்டேன் நாதஸ்வரம் அது
ஒலிச்ச பின்னே நானும்
மறுக்க மாட்டேன்
ஆ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கள்ளி என்ன கண்ணால்
கொல்ல தட்டுக்கெட்டு
போறேன் நானும்
தண்ணிப்பட்ட பாகா மெல்ல
பெ: என்ன சொல்ல?
ஏது சொல்ல?
கொள்ளி கண்ணு
ரெண்டால் மெல்ல
உருகித்தான் போறேன்
நானும் பத்த வச்ச
மெழுகா மெல்ல
********************

எழுதியவர் : Daniel Naveenraj (5-Apr-16, 11:40 am)
பார்வை : 375

மேலே