நான் என்ற என் ஆணவம்
காலை நேரம்,
கடற்கரை மணலில்
கால் பதிய நான் நடந்து
திரும்பிப் பார்க்கிறேன்;
கடல் அலை
என் தடம் அழித்து என்னைப்
கண்டு ’ஓ’வெனச் சிரித்து
கேலி செய்கிறது;
நான்
என்ற என் ஆணவத்தையும்
தன்னோடு எடுத்துச் சென்றது,
என்னை உணர்ந்தேன்!