தனிமையில் ஒருநாள்

நீண்டிருக்கும் கரத்தில்
சேர்ந்திருக்கும் சிகையின்
வியர்வை துளிகளை
ரசிக்கும் தருணமின்றி...

சிறைச்சேதம் செய்யும்
விழிகளின் கோதலின்றி...

கரைபுரண்டு ஓடும்
காதலின் ராட்சத
நொடிகளை விழுங்கியவாறு...

விடுமுறையின் வெறுப்பில்
தொடுதிரையை துவட்டிக்
கொண்டு

நேற்றொரு நாள்
அவள் இங்கிருந்தாள்
நான் மழைத்துளியில் நனையும்
குடைபோல சிரித்துக் கொண்டிருந்தேன்...

இன்றொரு நாள்
நான் இங்கில்லை
அன்றைய பொழுதிலேயே
லயித்திருக்கிறேன்...

போவோர் வருவோரின் பேச்சில்
ஒன்றிரண்டு காதில் விழுகிறது...

என்னைப் பார்த்து
சிரிக்கும் மழலைக்கு
என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை...

எரிகிற நெருப்பில்
எண்ணையை ஊற்றுவதாய்
பார்க்கும் ஒருவன்...

கேட்பாரற்று கிடக்கும்
இந்த பூங்காவின் இருக்கையில்
நாதியற்று நானொருவன்...
அப்பாடா...எதிரில்
இன்னும் ஒருவன்...

எழுதியவர் : (5-Apr-16, 11:08 pm)
பார்வை : 92

மேலே