தந்தைக்கோர் தாலாட்டு --முஹம்மத் ஸர்பான்

என் தோழன் தந்தை நீயே!
உதிரத்தை வியர்வையாக்கி
வளர்த்த தாயே!

உன் தோளில் தூங்கும் போது
உலகத்தின் வெளிச்சம் கண்டேன்
நீள்கின்ற பாதையில் தோல்விகள்
கடந்தேன் உன் கை பிடித்து.....,

அன்பை நீ முத்தமாக்கி
கன்னத்தில் நித்தம் வைப்பாய்.
ஆரிராரோ பாட்டுக்கட்டி தாலாட்டும்
இதயத்துடிப்பே! நீயும் ஓர் தாய்.

விண்மீனை ஆசைப்பட்டால்
நிலவிற்கு விலைகொடுப்பாய்.
பூக்களை வாங்கிக் கேட்டால்
பட்டாம்பூச்சிகளையும் வாங்கித் தருவாய்

உனக்காய் கவி பாட
தமிழிலும் எல்லையில்லை

உன்னை நினைத்தால்
ஆனந்த ஊற்று
இதயத்தில் வளர்த்த அன்பின் நாற்று
மனக்காகிதமும் நனைகிறது.
மகனின் மடி தூங்க
தந்தைக்கோர் தாலாட்டு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Apr-16, 5:53 pm)
பார்வை : 144

மேலே