மனம் தொட்ட ஹைக்கூ
மாடி வீட்டானையும்
மடியேந்த வைத்தது
மாநகர பெரு வெள்ளம்..! 1
கற்பகத்தின் கற்பு
களவாடப்பட்டது
காரணகர்த்தா ஜாமீனில் - ஜாலியாய்..! 2
தன்மானம் கெடுவதால்
தற்கொலை புரிகிறதா
அவமானப்படும் அலைகள்..! 3
இனமென்னும் எருதுக்கு
தனி தனி எரிமேடை
இடுகாட்டில் ஒரே பிணவாடை..! 4
இன்னும் பேச்சே வரவில்லை
அதற்குள்
குழந்தையின் கையில் செல்பேசி..! 5
பூ கட்டும் பூவே !
உன் விரலுக்குள் விளையாடும்
நாராக நான் ! 6
நிலவே! நிழலைக்கேள்
அது சொல்லும்
நான் கூட அழகென்று! 7
சுட்டெரிக்கும் சூரியனே !
உன்னை
சுட்டெரித்த சூத்தரதாரி யார்..!?8
வியர்வையில்
நனைந்த விக்ரகங்கள்
உண்மையில் விலைமதிப்பற்றவை ! 9
அலைகள் மேல் குற்றமில்லை..;
கடல் காதலிக்கும் மீன்கள்
மீனவ வலைகளில் சிக்குகின்றன ! 10