என் உணர்வுகளின் புரிதல் நீ
என்னைத் தாங்கும் என்னவளே
எப்படிச் சொல்வேன் உன் அன்பை
ஓர் இரு வார்த்தையில்
சொல்லி விடலாமா?
நிழல் கொடுக்கும் மரம் போல
எனக்கு தோல்வி வரும் போது
ஆறுதல் கூறி அரவணைக்கும் நிழல் நீ அல்லவா
நான் கடும் சொற்களைக் கொண்டு பேசினாலும்
உன் உணர்வை ஊமை ஆக்கி
உன் அன்பை பொழிந்து
என் கோபத்தை தணியச் செய்து
நான் விடும் தவறை எல்லாம் சரி செய்து
என்னை வழிப்படுத்தி குடும்ப சக்கரத்தை
வளப்படுத்தும் துடிப்பே நீ அல்லவா!!!