சுக வலி
அன்பிற்க்கினியவளே..
இனிதாய் மொழிபேசும்
சின்னவளே...
மலர்பறிக்க வந்தவனிவன்
புதுத்தேனருந்தியவனாய்
மயங்கி கிடக்கிறேன்....
மௌனமாய் கதைபேசும்
சின்னவளே....
உன்னால் செவியிரண்டும்
பழுதாகிக்கிடக்கிறேன்,,,,
அரிதாய் மலரும்
குறிஞ்சி மலரே
உன்னால் மேனியெங்கும்
மணம் சுழ்ந்திருக்கிறேன்...
சித்தெறும்பு கூட்டத்தில்
கட்டெறும்பாய்...
சுகமாய் வலிகொள்கிறேன்...
அங்கமெல்லாம் துண்டுத்துண்டாய்
துண்டிக்கப்பட்டாலும்
உன் பெயரை உச்சரித்துக்கொண்டே
உயிர்துறப்பேன்.....