பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்

மக்களின் ஓட்டை உறிஞ்ச‌
ஐந்து ஆண்டுகளாக காத்திருக்கும்
தேனீக்கள்..

வெற்றி பெற்றது மறைந்து போகும்
பகலில் தோன்றும்
வானவில்கள்..

அதைசெய்வேன் இதைச்செய்வேன் எனச்சொல்லி
எதையும் செய்து முடிக்கா
ஏப்பவாதிகள்..

ஓட்டுக்கேட்கும் போது ஒருமுகமும்
ஓட்டுக்கிடைத்ததும் வேறுமுகமும் காட்டும்
முகமாற்றிகள்..

பதவிக்காய் எதும் செய்யும்
கொள்கைகளையும் பறக்க விடும்
குழப்பவாதிகள்..

தெருவெங்கும் கொடிகள் கட்டி
ஊரெங்கும் விளம்பரம் செய்யும்
ஒலிப்பெருக்கிகள்..

காமராசரையும் கக்கனையும் மறந்து
பணஅரசியலில் தொந்தி வளர்க்கும்
விஷக்கிருமிகள்..

பாராட்டி எழுத நினைத்தும்
எழுதக்கூட ஒருவார்த்தை கொடுக்கா
கஞ்சாதிபதிகள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Apr-16, 1:32 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 966

மேலே