தாய் மாமன் ஆவேன்
அண்ணே அண்ணே
நீங்கள் யாருக்காக
வாழ்கிறீகள் தெரியும் அண்ணே
சொல்லாமலே புரியுதண்ணே
அது ஊர் அறிந்த உண்மை அண்ணே
ஒருகாலம் உன் தங்கை உன்னை விட்டு
புருஷன் வீட்ட போய் விட்டால்/
வாழ்நாளில் ஒரு பெண்
அன்னையின் பாதுகாப்பில்
அண்ணனின் அரவணைப்பில்
உறவுகளின் நேசத்தில் வாழ்ந்தாலும்
தனக்கு என ஒருத்தன் வந்து விட்டால்
புகுந்த வீட்டின் அடைக்கலம்தான்
நிஜம் அன்றோ அவளுக்கு
ஊட்டி ஊட்டி வளர்த்தாலும்
உழைத்து உழைத்து கொடுத்தாலும்
உன் தங்கை உனக்கல்ல,
அண்ணே உன் அன்பை அவளாலே
மறுக்க மறக்கவோ முடியாது
ஆனாலும் அதை அவளால்
அனுபவிக்க இயலாது போகின்றதே
அது அவள் செயும் குற்றமல்ல
ஆண்டவன் வகுத்திட்ட திட்டம்
அதுவும் உன் மனம் நிறையும் தெரிகிறது
இருந்தாலும் உன் அன்பை பாசத்தை
தாங்கித்தான் ஆக வேண்டும்
எதையும் தாங்குவேன் அவள் அன்புக்காக
இதையும் தாங்குவேன் அவள் வாழ்விற்காக
அவள் பாசம் தொடர
நான் தாய்மாமன் ஆவேன்
மீண்டும் என் மடியில் என் தங்கையாக
அவள் குழந்தை
அண்ணன் என்றால் அவனே அண்ணன்
அண்ணே உன் அன்புக்கு ஈடும் உண்டோ