எது ஜனநாயகம்
சொன்னதைச் செய்யணும் தலைவர்கள்
செய்வதை மட்டுமே சொல்லணும்
மண்ணதைக் காக்கணும் வாழும்வரைக்கும்
மக்களைப் பார்க்கணும் தன்மக்களாக
உரிமைகள் யாவர்க்கும் சரிசமமாக
உண்மைகள் பரவணும் நறுமணமாக
வீதிகள் இருக்கணும் மிகசுத்தமாக
தலைவர்கள் மனங்களோ பரிசுத்தமாக
அரசாங்க அலுவலகம் ஆதரவாக
காவலும் நீதியும் அரவணைப்பாக
போராட்டம் கடையடைப்பு மறந்தேபோக
தேரோட்டம் போலமக்கள் வாழ்க்கையாக
லஞ்சமும் ஊழலும் முடிக்கப்பட
பஞ்சமும் பகைமையும் விரட்டப்பட
உலகம் நம்மைக்கண்டு கற்றுக்கொள்ள
இதுதான் ஜனநாயகமென ஒற்றுக்கொள்ள
இருக்கவேண்டும் நாட்டில்நல்ல ஜனநாயகம்
ஒழியவேண்டும் உலவுகின்ற பணநாயகம்
பாட்டில்மட்டும் வாழவேண்டாம் ஜனநாயகம்
நாட்டில்என்றும் நிலைக்கவேண்டும் நல்லஜனநாயகம்...