வாக்காளர்கள்
அரசியல்வாதியின் சூதாட்டத்தில்
பகடைக்காய் இவனே...
ஒரு வேளை உணவே இல்லாவிடினும்
தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கு
வாரி வழங்கும் வள்ளல் இவனே..
இருக்கும் அந்த ஒற்றை சொத்தையும் இழந்துவிட்டு
அடுத்த ஐந்து வருடங்களுக்கு
ஏமாத்து கிடக்கும் பேதை இவனே..
இலவசத்தை வாங்கி வாங்கி
இல்லம் நிறைத்து விட்டு
அடுத்து என்ன கிடைக்கும் என்று
வாய்திறந்து கிடக்கும் இளிச்சவாயன் இவனே..
இவனை வைத்தே எல்லாம் சாதித்துவிட்டு
இவனை கண்டுகொள்ளாமல் ஏமாற்றும்
கட்சிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும்
தனது ஓட்டால் என்று பாடம் புகட்டுகிறானோ
அன்றுதான் ஒரு
உண்மையான வாக்காளன் பிறப்பான்...