கருணை புரிவாய் இறைவா
கருணை புரிவாய் இறைவா..!
நூதன மொழி பேசும்
தேசம் வேண்டேன் - மனிதரை
வாகனமாய் நினைக்கும்
நேசம் வேண்டேன்..!
வழிகாட்டி இல்லாத
பாதை வேண்டேன்
வழியினிலே முள் இறைக்கும்
உறவுகள் வேண்டேன்..!
ஈன்றோரை அநாதையாக்கும்
இழி பிறவி நோக்கேன்.
சான்றோராய் வேடமிடும்
சதிகாரர் நோக்கேன்..!
காசுக்கு கல்வி விற்கும்
நீசர்கள் பழிப்பேன்
பிணத்திற்கு மருத்துவமாம்
கொலைகாரர் பழிப்பேன்..!
எரிகின்ற நெருப்பினிலே
எண்ணெய் ஊற்றி
இன்புறுவோர் எவரெனினும்
எட்டியே நடப்பேன்..!
பட்டதெல்லாம் போதுமன்றோ
பாழும் உலகிலே
கருணை கொஞ்சம்
நீயும்செய் என் கடவுளே..!