சிறு பகுதிகள்

சிறு பகுதிகள்
பொய் தேசத்தில் உண்மை கிராமம்
தன்நல நிலத்தில் பொதுநலம் சிறு மண்திட்டு
எதிர்மறை ஏணியில் நேர்மறை படி
தோல்வி கடிகாரத்தில் வெற்றி நொடி
அரசியல் வெள்ளத்தில் நியாயங்கள் சிறு குச்சி
அவநம்பிக்கை கடலில் தன்நம்பிக்கை தீவு
கோப உடலில் புன்னகை மச்சம்
சொகுசு பேருந்தில் வறுமை பயனசிட்டு
வேண்டுதல் கோவில் அடைந்தவை பிரசாதம்
சோகம் வானம் இன்பம் நிலா
அவசரம் தூக்கத்தில் அமைதி சிறு கனா

எழுதியவர் : கமலக்கண்ணன் (8-Apr-16, 2:32 pm)
பார்வை : 53

மேலே