சரண்
மோதலில் உறவு தொடங்கினாலும்
சரணடைதலில் தான் அது மேம்படும்.
கருத்துக்கள் வேறுபட்டால்
உன் கருத்து என் கருத்து
என இருவேறு கருத்துக்கள்...
வேறுபாட்டில் வெற்றி எதற்கு?
உன் சொல்லே எனக்கும் சரி
உன் பார்வை எனக்கும் சரி
ஒருமித்த ஒரு கருத்து
உறவை பலம் செய்யும்!
ஈருடல் ஓருயிர் என்றானபின்
இருவேறு கருத்தெதற்கு?
இரண்டை தாண்டி ஒன்றானால்
இல்லறம் சிறக்குமே!