கனவுகள் வருவதில்லை

துவரை பருப்பின் இடத்தை
மக்காச் சோளம் பிடித்துக் கொண்டது
ஆன்லைனில் வர்த்தகமும்
பதுக்கலும் துவரை விலையை
ஏற்றியது ..
வங்கிகள் வசூலிக்க இயலாத
பல்லாயிரம் கோடிகள்..
இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்
என்கின்ற கோஷங்களும்
புதிய கூட்டணிகளும்
பழைய வாக்குறுதிகளும்
எதுவுமே ..
என்னை பாதிக்கவில்லை.

.
ஒவ்வொரு இரவிலும்
மிச்சமிருக்கும்
சில்லறை நோட்டுகளை
இடுப்பில் முடிந்து
பாதையோரத்தில் படுத்தவுடன்
உறங்கிவிடும் எனக்கு
கனவுகளும் வருவதில்லை!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:39 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 221

மேலே