வாழு

காட்டுப்பூவாயினும்
அழகாக இருக்கிறது
தனிமை ..

தடவித் தடவி
தன் இருப்பினை உணர்த்துகிறது
காற்று…

மயிலொன்றின் வருகையில்
மலர்கிறது மனம் ..

அதிசயங்கள் நிகழ்த்துகிறது
வானம்

மூலிகையின் மணமும்
உற்சாகமும் தருகிறது அருவி ..

சிரிக்கிறது ..பேரொளி எழுப்பி
இயற்கை

வாழு ..இக்கணத்தில் என்கிறது
வாழ்க்கை !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:37 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : vaazhu
பார்வை : 61

மேலே