கண்டோம் பாவினிலே

கை வளை குலுங்க
கொடி இடையாள்
பால் செம்பு ஏந்தி
நாணம் படர
வலது காலை
எடுத்து வைத்து
புகுந்தாள் அகத்தில்
தேவகி .


கை குலுக்கி
இடை தெரிய
மதுவேந்தி
நிமிர்ந்து
காலணிகளோடு
எடுத்து வைத்து
புகுகிறாள் இல்லத்தில்
அதிதி .

முந்தி விலகாமல்
அதிராத நடையுடன்
கண்ணாலே பேசி
கணவனை புரிந்து
அணைந்து நாடி
அழகாக விரித்தாள்
தேவகி.


முந்தியே காணாமல்
தடதடவென்ற நடையுடன்
உரக்க அறை கூவி
கணவனை விழித்து
கும்மாளமிட்டு ஆடி
வேகமாக விரிகிறாள்
அதிதி .


இருவருமே பெண்கள்
காலமும் நேரமும்
இன்றும் நேற்றுமாக
தேவகியும் அதிதியும்
வாழந்த வாழ்கின்ற
பக்குவ மாற்றங்களை
கண்டோம் பாவினிலே !

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (9-Apr-16, 5:17 pm)
பார்வை : 846

மேலே