உயிர்ஜனிப்பு

கறுப்பு வெள்ளை நிழல் நான்
விண்ணின் வானவில் நீ
நாம் இணைந்தால்
அழகோவியம்!!!
வீசும் தென்றல் காற்று நான்
மயக்கும் ஸ்வரங்கள் நீ
நாம் இசைந்தால்
மெல்லிசை!!!
தமிழ்த் தந்த எழுத்துக்கள் நான்
அழகான இலக்கணம் நீ
நாம் மொழிந்தால்
பெருங்காவியம்!!
நித்தமும் தோன்றும் கனவுகள் நான்
சுகமான நினைவுகள் நீ
நாம் உயிர்த்தால்
வண்ணத்திரைப்படம்!!!
திமிறித் திரியும் ஆண்மை நான்
நாணங்கொண்ட பெண்மை நீ
நாம் கூடினால்
உயிர்ஜனிப்பு!!!