நினைத்தாலே இனிக்கும் போதை

மது போனால
போகட்டும் போடா.
@@@
மது தரும் போதை
சில மணி நேரமே
அதன் நாற்றம் வேறு
மது வெறுப்போரை
விரட்டி அடிக்கும்.
@@@@
எந்நேரமும் போதையில்
மகிழ்ந்திருக்கவும் வழியுண்டு.
அது தான் திரைக் கவர்ச்சிப் போதை
நினைத்தாலே இனிக்கும் போதை!
@@@
கவர்ச்சி போதை
காதல் போதை
காமவெறி போதை
கற்பழிப்பு போதை
கொலைவெறி போதை
சாதிவெறி போதை
ஆணவக் கொலை போதை
பழிவாங்கல் போதை
படிப்பைக் கெடுக்கும் போதை
பண்பாட்டை அழிக்கும் போதை
மொழியைச் சீரழிக்கும் போதை
@@
இப்படி எத்தனையோ போதைகள்
நினைத்தாலே நெஞ்சில் ஊறும்!
நமக்கினியேன் நாற்றந்தரும்
மது போதையெல்லாம்
@@
அகன்ற வெண் திரை
சின்னத் திரை
செல்பேசித் திரை
கணிப்பொறித் திரை
@@@@
இன்னும் என்ன வேண்டும் நமக்கு?
மது போனால் போகட்டும் போடா!
நினைத்தாலே இனிக்கும்
திரை தரும் போதைக்கு
எந்தக் கொம்பனாலும்
தடை போட முடியாது.

எழுதியவர் : மலர் (11-Apr-16, 9:08 am)
பார்வை : 236

மேலே