ஓ அவள் என்னைக் காதலிக்கிறாள்
அவள் வயதோ இருபத்தியொன்று,
தன்னைத்தான் புரிந்து கொண்ட வயது,
நேர் கொண்ட பார்வை – எண்ணித்
துணியும் பக்குவம்!
அவள் குரலைக் கேட்கிறேன்
அவள் என்னை அழைக்கும் பாவனை!
அவள் பாடலைக் கேட்கிறேன்,
அவள் எனக்காகப் பாடும் தோரணை!
அவள் முகம் பார்க்கிறேன்,
அவள் என்னிடம் பேச எத்தனிக்கிறாள்!
அவள் இதழ்களைப் பார்க்கிறேன்,
அவைகள் என்னைப் பரிகசிக்கின்றன!
அவள் கைகளைப் பார்க்கிறேன்,
அவைகள் என்னைத் தழுவத் துடிக்கின்றன!
அவள் கண்களில் காதலை உணர்கிறேன் – ஓ...
அவள் என்னைக் காதலிக்கிறாள்.....!

