வள்ளுவம் வாழ்வதெங்கே

ஒட்டிய வயிறும் ;
ஒடுங்கிய கன்னமும் ;
பசியை மறைக்க ;
பச்சை தண்ணீருமாய் இருந்தபோதும் ;
பாதை மாறாமல் வாழ்க்கை பயணம் தொடரும் ;
பச்சை தமிழன் இருக்கும் வரை -
வள்ளுவம் வாழும் !
காலம் மாறலாம் ;
கலாச்சாரம் மாறலாம் !
கட்டிய கணவனோடு ;
காலமெல்லாம் வாழும் மனைவி இருக்கும் வரை ;
வள்ளுவம் வாழும் !
வசதிகள் வந்தபோதும் ;
வாசல் வரை வந்தவரை ;
இன்முகத்தோடு வரவேற்று ;
இளைப்பாறவும் வைத்து ;
தேநீர் விருந்து வைத்து ;
தேக சுகம் விசாரிப்பவர் இருக்கும் வரை ;
வள்ளுவம் வாழும் !
வயது வந்து காத்திருந்தும் ;
வாழவைப்பான் தந்தை என -
வாசல் தாண்டா வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும்வரை;
இப்பூ உலகம் உள்ளவரை ;
வாழும் ஐய்யா வள்ளுவமும் !