மீனாகிய மிர்தாத்தின் புனைவு நான்

ஏனோ
எழுதி விடுவதை விட
படித்து விடுவதில் பரவசம்
உன் மிர்தாத்..
அது அகவித் திரியும்
காட்சிகளின் கூடாரத்தை அகற்றிக்
கொண்டேயிருக்கிறது...
எனது கால்தடங்களில்
நீரூற்றும் உன் பொங்குதலின்
நிமித்தம் அவற்றை
மடைமாற்றி நதி செய்கிறேன்...
தூரத்து மலை உச்சியின்
தீர்த்தம் உதிர்வதாக,
பெரும்பாலும் உன் சொற்கள்
கலந்து நீள்கையில்
நானும் உன் மிர்தாத் ஆகிறேன்...
மீதம் செய்து மீட்டி
எடுக்கும் உன்
புனைவுகளில் நான் மீனாகிய
தவழுதலின் வசம்....
அது மிர்தாத்தையே
நீந்துகிறது......
கவிஜி