சினிமாவுக்கு எனது வரிகள் - 1

திரைப்படப் பாடலுக்கான மெட்டில் எனது வரிகள்.
படம்: கும்கி
பாடல்: அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ள பூகம்பமே
கண்களிலே தேரோட்டமே
பாதை மாறிப் போகையில்
பாவம் நெஞ்சு நோகுதே
உன்னைக் கண்கள் பார்க்கையில்
காதல் கூடிப் போகுதே
காற்றில் இரு தீபம்
காதல் கதை பேசும்
(நெஞ்சுக்குள்ள பூகம்பமே...)
கண்ணில் தெரிந்திடும் காதல் மயக்கத்தில்
என்னை உன்னில் தொலைத்தேன்
கன்னக் குழியிலே வெள்ளிக் குவளையில்
என்னைக் கண்டு பிடித்தேன்
அடி நீயும் நானும் சேர்ந்து வாழலாம்
ஒரு வேகம் கொண்டு மடியில் சாயலாம்
காதலில் உள்ளது நாணம்
அது குறைந்து போவதால் மோகம்
காரணம்... சொல்லவா... உயிரே...
(நெஞ்சுக்குள்ள பூகம்பமே...)
உள்ளம் துடித்திடும் உன்னை நினைத்திட
நித்தம் நித்தம் அழுதே
கனவினில் வரும் வெள்ளை மலரினில்
உன்னைக் கண்டு ரசித்தேன்
விழி பேசும் பாஷை காதில் கேட்குதே
ஒரு காதல் பாடல் பாடத் தோணுதே
கண்டதும் வந்தது காதல்
அதை சிறையில் வெச்சது போதும்
காதல்... வலிக்கும்... சுகமே...