இசையில் கரைகிறேன்

உள்ளத்தை உருக்கும்
இது பனிக்கூழ் அல்ல ;
கர்வத்தை கலைக்கும் ;
மயிலிறகாய் மெல்லமெல்ல
மொழிகள் தேவையில்லை
உன்னை உணர்வதற்கு ,
செவிகள் தேவையில்லை
நீ இல்லாமல் நான் வாழ்வதற்கு .
பூவையும் திறப்பாய்
மனிதன் மனதையும் திறப்பாய்
உள்ளே ஒற்றை வண்டாய் என் உயிர் - அதை
நீ மட்டும் தான் கண்டுள்ளாய் இதுவரை.
ரசனைகள் போதவில்லை !
உவமைகள் தேவைப்படவில்லை !
உன்னை வர்ணிக்க.......

எழுதியவர் : deepthi (11-Apr-16, 4:33 pm)
பார்வை : 110

மேலே