எது ஜனநாயகம்

அத்திப்பூ ஏப்ரல் மாத இதழில் வெளியான எனது கவிதை
*************

எது ஜனநாயகம்?

நாநயமும்
நாணயமும் சேர்ந்து
நாணயத்தை அழிக்காமல்
பூவனத்தைப் படைப்பதே
ஜனநாயகம்.

தேர்தல் களத்தில்
மதங்களுக்குப் பதில்
மனிதம் வெல்வதே
ஜனநாயகம்.

உழைப்பை நேசிக்கும்
உன்னதச் சமூகத்தை
உருவாக்குவதே ஜனநாயகம்.

மக்கள் முன்னிலையில்
முக்கிய முடிவுகள்
முகிழ்த்தெழுந்தால்
அது ஜனநாயகம்.

தரித்திர நாசம் உடைத்து
சரித்திரம் பேசும்
சமத்துவத் தேசம் படைக்கும்
பவித்திரப் படையலே
ஜனநாயகம்.

-கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (11-Apr-16, 6:44 pm)
Tanglish : ethu jananayagam
பார்வை : 375

மேலே