கடல் சிரிக்கிறது

நான்

அந்த கடற்கரையின்

அலைகளில் லயித்து

திரும்பும் போது

அங்கு

நிலவு இல்லை

என்

வரவுக்கு காத்திராமல்

அது

போய் விட்டிருந்தது!



எழுந்து நின்று

வெளிச்ச மழையில்

நனைந்தபடி

கவனத்தை சிதறாது

நடப்பவன் நினைவை

கலைக்கிறது

"ஹோ" வென்ற சப்தத்துடன்

எழும்பும் பெரிய அலை!



இன்னும் கொஞ்ச நேரம்

இருந்து விட்டுத்தான்

போயேன் ..

என்றது அது ..

ஈரமணலில் அமர

திரள்கின்றன

மழை மேகங்கள்..

வட்டமடித்து திரும்புகின்றன

பறவைகள்..!



எதனையும்

தடம் மாற்றி விடும்

ஆர்ப்பாட்ட குணத்தோடு

என் தடத்தை

அப்படித்தான் மாற்ற

முயல்கின்றன ..

இந்த அலைகள்..!



இந்த அதிகாலையில்

ஆறுதல் சொல்லும் அவற்றின்

தொடுகைகளில்

இந்த நொடியில்

தீர்மானிக்கிறேன்

வாழ வேண்டுமென்று

கடல் சிரிக்கிறது

ஓங்காரமிட்டு

நண்பனின்

முடிவில் மாற்றம் கண்டு!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (12-Apr-16, 3:41 pm)
Tanglish : kadal sirikkirathu
பார்வை : 105

மேலே