துளித்துளியாய்
அருவியின்
தியானத்தையொத்த
இடைவிடாத
விழுதலாய்
பாறைகள் மீது
மோதுகின்ற
புதுப்புனலாய்
அரிதாய்
அழகாய்
வெண்பஞ்சு நுரையோடு
விஸ்வ ரூபமெடுத்து
நதியாய்
நடந்தாய்
வாழ்வே
அனு தினமும்
வடிவம் மாற்றி
மனதினில் ஊற்றெடுத்து
விரிந்தாய்
வெவ்வேறாய்த்
தெரியும்
வாழ்வே ..
பருகுகின்றேன்
உன்னை
துளித்துளியாய்
என்னை நீ
தொட்டு பரவிடும்
கணத்தில் எல்லாம்
வாழ்க்கை
ஒவ்வொரு கணத்தினில்
வாழ்வதில்..
தானே என்கிறாய் !

