காமத்தாள் கருகிய குழந்தையின் கதறல்

என் பாட்டிற்குதானே விளையாடிக் கொண்டிருந்தேன்
வீதியால போன உனக்கு
என் மேனி என்ன செய்தது
கொய்து விட்டாயே,
என்னன்னு நினச்ச என்ன
எட்டு வயது கூட இல்ல
பதினெட்டு வயது குமரின்னா நினச்செ
இல்ல பரட்சின்னா நினச்ச
நீ பந்தாடிப் போன என் பச்ச மேனி
தீக்கிரையான கத பத்திரிகையா பறந்த சேதி உன் காதுல எட்டலயா...?
என்னப் போல இன்னும் எத்தன தேடிக்கிட்டிருக்ற..?
என் சேதி பேசும் உலகம்
உன் முகத்திரை கிழிக்கும்,
ஏ அம்மா அழுதழுதே தேஞ்சிருப்பாளே
என் அப்பா எப்படி தாங்கிக்கிட்டாரோ
உன் வேர்வையில என் ரெத்தம்
கசிஞ்சி போன விவரம்
விளம்பரமா வந்தப்போ..?
சின்ன புள்ளன்னு பாத்தியா
சிறுத்தயா பாஞ்சா
இறுக்கிப் பிடிக்கும் மரணத்தோட
மாரடிக்க முடியாதுன்னு தெரியலயா...?
ஆறாம் அறிவா பகுத்தறிவு
உன் பகுத்தறிவா என்ன
பாதி பாதியா பிச்சது...?
என்ன நினச்ச என்ன
சின்ன புள்ளன்னு மறந்தா தொட்டெ
கதறிக் கேட்ட என் அழறல்
உன் காதுகளைப் பிய்க்க வில்லையா
அம்மா, அப்பா என்றழுத
என் குரல் உனக்கும் ஒரு மகள் பிறப்பாள்னு சொல்லலயா...?
பிறந்தா உன்க்கே இறையாவாள்னு உன் மனைவிக்காச்சும் சொல்லட்டும்
என் மரணமொரு பாடமாகட்டும்...
காலமெல்லாம் பெண் பிள்ளை நாங்களே கருகுவதேன்
கள்ளிப்பால் ஊத்தி கொண்ட ஹைதர் காலமும்
காமப்பால் தீத்துக் கொல்லும் கலியுக காலமும் எங்களுக்கு
விதிவிளக்காச்சு


M.F.Askiya

எழுதியவர் : M.F.Askiya (12-Apr-16, 2:13 pm)
பார்வை : 658

மேலே