நீயாவது எங்களை காத்தருளம்மா
தர்மம் காக்கும் மகேஷ்வரி
அகிலாண்டேஷ்வரி
திரிபுரசுந்தரி
உயிர்களை காக்கும்
தாயே
கருமாரி
மகமாயி
முத்துமாரி
காமாட்சி
மீனாட்சி
விசாலாட்சி
வக்கிரகாளி
அக்கரகாளி
வெல்லவேண்டும் நன்மை
வீழ வேண்டும் தீமை
அரசியல் நாடகம் வேண்டாமம்மா
போதும் அம்மா
எத்தனை காலம் தான் நாங்கள் ஏமாறுவதம்மா
அறிக்கை ஒன்றை நீயும்
விடுமம்மா
மக்களை ஏமாற்றும்
அரசியல்வாதியை வதம் செய்வேனே என்றேயம்மா
எந்தன் அம்மா
கல்லாய் நீயும் மாறாதேயம்மா (அரசியல்வாதி போல்.
நீ கல் என்று யார் சொல்வது .
உருவம் கல்லாய் இருக்கலாம் .
உள்ளம் தான் கல்லாய் இருக்ககூடாது.
இந்து கிருஸ்தவம் முஸ்லீம் பிரித்து பார்க்க தேவையே இல்லை. எல்லாம்அன்பு காட்டதான் சொல்கிறது.
எல்லோரும் உன்னை போலவே ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள் தான்.)
கருணை கொண்டு நீயேனும் எங்களை காத்தருளேயம்மா
அம்மா
பராசக்தி
பரம்பொருளே
நீதானம்மா
எங்களை காத்தருளம்மா
~ பிரபாவதி வீரமுத்து
மறக்காமல் அனைவரும் கட்டாயம் வாக்களியுங்கள்.....
ஒவ்வொரு தடவையும் வாக்களித்து வாக்களித்து ஏமாறுகிறோம் என்பதையெல்லாம் கடந்து.
நாம் நம் கடமையான வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றிடுவோம்.
எவன் வந்தாலும் நல்லது செய்ய போவதில்லை என்றால் 49 ஓ அதில் உங்கள் வாக்கை பதியுங்கள்
~ பிரபாவதி வீரமுத்து