புத்தாண்டு வாழ்த்து சொல்ல

தமிழர் நமை
கட்டுகின்ற கைகளும் கை விட
கொட்டுகின்ற எண்ணமும் எரிந்திட
தட்டுகின்ற கால்களும் தடுக்கிட
முட்டுகின்ற மூர்க்கனும் மூழ்கிட
வெட்டுகின்ற திசைகளும் விலகிட
ஆட்டுகின்ற அரசாட்சியும் அகன்றிட
ஈட்டுகின்ற ஊழலும் கலைந்திட
ஊட்டுகின்ற மதுவும் உருண்டோடிட
எட்டுகின்ற வறுமையும் எழுந்தோடிட
ஒட்டுகின்ற அரசும் ஒதுங்கிட
ஓதுகின்ற பொய்களும் பெயர்ந்திட
தமிழர் நாம் தமிழராய் வென்றிட
தமிழர்க்கு வாக்களித்தே..
இரட்டை வலுப்பெறுவோம்
ஒரு சபதமெடுத்து
மறு யுகம் படைக்க
தமிழா...!
நமக்கு தமிழ்
புத்தாண்டு வாழ்த்து சொல்ல
வந்திருக்கிறது இன்று

எழுதியவர் : செ.பா.சிவராசன் (14-Apr-16, 11:11 am)
பார்வை : 3181

மேலே