ஹாப்பி நியூ இயர்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று காலையில்

நான் எழுந்து ,வெளியே வந்ததும்

முதலில் பார்த்த

பால்பொட்டலம் கொண்டுவரும் பையனிடமும்

பக்கத்து வீட்டுப் பாட்டியிடமும்

"புத்தாண்டு வாழ்த்துக்கள்"

என்று கூறினேன்.

புரியாமல் விழித்தார்கள!

" ஹாப்பி நியூ இயர் " என்றேன்.

" விஷ் யூ தி சேம் " என்றார்கள்.

HAPPY NEW YEAR

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம் ) (14-Apr-16, 12:32 pm)
பார்வை : 74

மேலே