சிராய்ப்புகள்
இன்ன மொழி கூற
காதல் தன்னை
காற்று விழுங்கிக்கொள்ள
காதலியவள் கார்கூந்தல்
பூவுக்கும் தெரியும்
கடைக்கண் விழிக்கேங்கியது
கானல் நீரில் கயலாய்
காலம் கடத்துகிறேன்
சீக்கிரம் காதலி…
நீ திறக்காதவரை
இது என் இதயமல்ல
நீ அழைக்காதவரை
இதுஎன் பெயருமல்ல
திறந்துவிடு என் இதயதத்துடன்
உன் இதழ்களையும்…
ஸ்வரமாய் நீயாகினால்,
ஸ்ருதியாகின்றேன்,
தமிழாய் நீயாகினால்,
கவியாகின்றேன்.
கானலாய் நீ வரவே
காய்ந்து போகின்றேன்
காற்றோடு நீ வரவே
காத்திருக்கிறேன்…
கவியெழுத
தவறொன்றை
செய் என்றார்கள்
உனை காதலிக்கிறேன்
ஏமாற்றிச் செல்…