மணாளா வா

காலை மலர் பூவாய் சிரிக்கிறேன்
கண்ணாளா உன் கண்கள் அறியவில்லையோ
காற்றோடே காதலுரைக்கின்றேன் -உன்
காதில் விழவில்லையோ

கனவில் மட்டும் கண்சிமிட்டும் மணாளா
என் மனம் புரியவில்லையோ-முதற்சொல்
நீ உரைக்க வேண்டும் மரபுகளுக்காகவே
ஒடுங்கி நிற்கிறேன்

மாமன் இவன் மகள் எனக்கு
மஞ்சள் தர ஒருவார்த்தை சொல் கண்ணா
காலம் கரைகிறதடா
கன்னியிவள் உடல் n பாலே

சாளரங்களை சீக்கிரம் திற அன்பே
என் கண்ணீர் சாரல்கள் வந்து நிற்கிறது,
நீ எந்தன் கனவில் வரத்தானே
தூங்க நினைக்கிறேன், நிஜமாய்
வந்துவிட்டால், என தூக்கம் களைகிறேன்,
உன் வார்த்தைகள் தானடா சுவாசம்
காதலுரைத்து உயிர்கொடு - உன்
மாமன் உனை மருகன்
என்றழைக்க காத்திருந்தாயோ

மல்லிகை மலர் இங்கு கண்ணீரிலே
காதல் செல்வதை காணவில்லையோ-ஆ
அய்யன் இவன் உதடுகள் சிரிக்கிறது
சீக்கிரம் வா சிரத்தை கொண்டுள்ளேன்.

எழுதியவர் : charlie kirubakaran (14-Apr-16, 2:50 pm)
பார்வை : 98

மேலே