சாகாத தன்னம்பிக்கை

கலங்கிய விளக்காய்
கரையில் நான்
கலங்கரை விளக்காய் அல்ல
கலங்கடிக்கும் புகையாய்
கடல் போல்
கயவர்கள் கூட்டம்
நம்பிக்கை நாணாய்
ஒரு பிடிப்பும் புலப்படவில்லை
இருப்பினும்
இடறுவதில்லை என் பயணம்
தொடர்ந்திடும் இருளில்
கண்ணுக்குப் புலப்படாத
கொடியவர்கள்
நேர்மையில்லா வஞ்சகர்களின்
சக்கர வியூகத்தில்
சிக்கிய அபிமன்யூவாய்
செத்தாலும் சாகாத
தன்னம்பிக்கை என்
கைகளில் ஏந்தியே
தொடர்கின்றேன் வேள்விகளை