உலகப்புகழ்பெற்ற ஓவியரும் இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக் கலைஞரும், பல்துறை மேதையுமான லியானார்டோ டா வின்சி
ஓவியக்கலையின் பிதாமகர், தத்துவமேதை, வானியல் விஞ்ஞானி, பொறியியலாளர், கட்டிட நிபுணர், ராணுவ ஆலோசகர், கடல் ஆராய்ச்சியாளர், நீர்ப்பாசன நிபுணர், சிறந்த சிற்பி, கவிஞர், இசை விற்பன்னர் எனப் பல்வேறு களங்களில் செயல்பட்டார்.
மனித உடற்கூறுகளைத் துல்லியமாக வரைந்தார். விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்தன. இவர் விட்டுச் சென்ற குறிப்பேடுகளில் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற நவீன கண்டுபிடிப்புகளின் சித்திரங்கள் காணப்பட்டன.
ஓவியம் உள்ளிட்ட 9 வகையான கலைகளைக் குறித்தும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் திறன் பெற்றிருந்த இவர் இடதுகைப் பழக்கம் கொண்டவர். வலப்பக்கமாகத் தொடங்கி இடது பக்கமாக எழுதுவார். இவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாகத்தான் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட மகத்தான படைப்புகள், காலத்தை வென்ற படைப்பாளி என இவர் பெருமை பாடுகின்றன. உலகம் போற்றும் உன்னதக் கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதை