எங்கே போகிறது உலகம்

எந்தன் மனமும் சரியில்லை -இங்கே
எந்த மனிதரும் சரியில்லை. ..
இந்த உலகமே சரியில்லை-இதில்
எந்த உயிரும் நிலையில்லை.
சரியானதும் சரியில்லை வாழ்வில்
நிலையானது நிலையில்லை. .
சரியான மனிதரும் கூட
நிலையான கல் சிலைகளாய்
நீண்ட மணிமண்டபத்தில் நிற்கதியாய்..,
திக்கற்று வீற்றிருக்கிறார்கள் மௌனமாக. ....!
எங்கே போகிறது உலகம். ..?