அசுவினி பூச்சி பேரா எம்பேத்திக்கு
அடியே அசுவினி எங்கடி போயிட்டே?
@@@
பாட்டி எனக்கு எங்க அம்மாவும் அப்பாவும் அழகான அஷ்வினி –ங்கற இந்திப் பேர வச்சிருக்காங்க. நீங்க என்ன அசுவினி. அசுவினி –ன்னே கூப்பிட்டு என்ன அசிங்கப்படுத்தறீங்க பாட்டி.
@@@
உன்ன அசுவினின்னு கூப்படறது தப்புத்தாண்டி. இனிமே அச்சுவினினே கூப்படறேன். அந்த இந்திப் பேருக்கு என்னடி அர்த்தம்? சொல்லுடி பாக்கலாம்.
@@@
எங்க அம்மா அப்பாவுக்கே அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியாது. இப்பெல்லாம் இந்திப் பேர வைக்கறது நாகரிகம் பாட்டி. தமிழ்ப் பேர வச்ச நம்மள யாரும் மதிக்கமாட்டாங்க பாட்டி.
@@@
சரிடீ பேத்தி இந்திப் பேர வெறித்தனமா வச்சுக்கறவங்கெல்லாம் இந்திலெ பேச வேண்டியது தானே. எதுக்கு சினிமாத் தனமா நம்ம தமிழப் பேசி நம்ம தாய் மொழியை அசிங்கப்படுத்தறீங்க? அவரைச் செடியிலெ/கொடியிலெ இருக்கற சாறை உறிஞ்சி அந்தச் செடியைச் சாகடிக்கற பூச்சி தான் அசுவினிப் பூச்சி. உங்க அம்மா அப்பனப் போன்றவங்கதாண்டி அசுவினி பூச்சியா மாறி தமிழைச் சீரழிக்கறாங்க.
@@@
*அசுவினி (நன்றி: கூகுல் வலைத்தளம்)
@@@@@
காய்கறிகளில் நிறைய பூச்சித் தாக்குதல், செடி அவரையில் தான் வருகிறது. இங்கே பொதுவாய் வரும் பிரச்சனை, அசுவினி போன்று சாறு உறுஞ்சும் பூச்சி. இவைகள் கூட்டமாய் செடியின் தளிர்கள், பூக்களில் இருந்து சாற்றை உறிஞ்சி செடியை வாடிப்போக வைத்து விடும்.
@@@
Ashwini in Sanskrit means “Possessor of horse or horse tamer.” In Hindi Aswini means “light.”
சமஸ்கிருத மொழியில் அஷ்வினி என்றால் குதிரையின் உரிமையாளர் அல்லது குதிரையை அடக்குபவர்” என்று பொருள். இந்தி மொழியில் அஷ்வினி- என்ற பெயருக்கு “ஒளி” என்று பொருள்.
நன்றி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம் போட்டி அறிவிப்பு::
************************************************************************************************
1. உலகத்தில் உள்ள 75 மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள்.
@@@@@@@
2. உலகத்தில் தமிழ் பேசக்கூடிய மக்களில் ஒருகால் அளவு மக்களுக்கு தமிழ் படிக்கவோ, எழுதவோ தெரியாது.
@@@@@@@@
3. உலகத்தில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700. அதில் 100 மொழிகள் தங்கள் சொந்த அகரவரிசை கொண்டது. 6 மொழிகள் செம்மொழி ஆகும். அவை ஹீப்ரூ, ஓல்ட் கிரேக், சமஸ்க்ரிதம், சீனா மொழி மற்றும் தமிழ். ஆனால் ஹீப்ரூ, சீனா மொழி மற்றும் தமிழ் மட்டும் தான் மக்கள் பேசவும் எழுதவும் பயன்படுகிறது.
@@@
நம் செம்மொழியில் அழகான பெயர்களுக்கா பஞ்சம்? மொழிப் பற்றை வளர்ப்போம். பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிவோம்.