நாங்கள் பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தே பொதுக் கழிப்பிடங்களுக்குப் பெயர் சூட்டும் கோப்பில் தான்

மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் மொடாக்குடி மாடசாமியின் அறிவிப்பு.:

வாக்காளப் பெருங்குடி மக்களே, எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில் தமிழ்கத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிதறி நின்று போட்டியிடுவதால் நாங்கள் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவது உறுதி என்பதை முன்பே மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் என்ற முறையில் அறிவித்திருந்தேன்.
@@@@
எங்கள் கட்சியில் நான் தான் முதல் அமைச்சர் வேட்பாளர் என்பதைப் பெருமகிழ்வோடு அறிவிக்கிறோம்.
@@@@
இது வரை அரசு உணவகங்கள், அரசு தயாரிக்கும் உப்பு, தண்ணீர் போன்ற பல பொருள்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
@@@@@
ஆனால் மக்கள் பயன்படுத்தும் அரசு செலவில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்களுக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை.
@@@@@
எங்கள் அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் எனது முதல் கையொப்பமே பொதுக் கழிப்பிடங்களுக்குப் பெயர் சூட்டும் கோப்பில் தான்.
@@@
ஆண்கள் கழிப்பிடங்களுக்கு மொடாக்குடி மாடசாமி அய்யா கழிப்பிடம் என்று பெயர் சூட்டி பெயர் பலகைகளில் எனது வண்ண நிழல் படம் ஒட்டப்படும்
@@@@@
, பெண்கள் கழிப்பிடங்களுக்கு காத்தாயி அம்மாள் கழிப்பிடம் என்று பெயர் சூட்டி, பெயர் பலகைகளில் எனது வாழ்க்கைத் துணைவியும், எங்கள் கட்சியின் மகளிரணித் தலைவியாகவும் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவரும், மற்றும் சமூக நலத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளவருமான காத்தாயி அம்மாள் அவர்களின் வண்ண நிழல்படம் ஒட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : மலர் (16-Apr-16, 3:18 pm)
பார்வை : 118

மேலே