கூச்சம்

*பேருந்திற்குள்
அவன் ஏறுகையில்
எதிர்பாராத விதமாய்
அவனுக்கு
பிடித்தவளும் அமர்ந்திருக்கிறாள்
வழக்கம்போல் உள்ளுக்குள்
ஆயிரம் பூ பூத்திருக்கலாம்
ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்திருக்கலாம்
அவளுக்கும் அவனை பிடிக்கும்
வழக்கம்போல்
வெளிக்காட்டிக் கொண்டதில்லை
பேருந்தில் ஏறியவன்,
அவளுக்கு முன்னால் அமர்ந்தால்
அவளை பார்ப்பதற்கு
திரும்பித் திரும்பி
பார்க்க வேண்டுமேயென்று
கூச்சப்பட்டுக்கொண்டு
அவளுக்கு
பின்னாலமர்ந்து கம்பீரமாய்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
சில நிமிடங்கள் கரைந்தபின்
அவனுக்கு
பின்னாலமர்ந்த பெரியவரிடம்
இங்கே அமர்ந்தால்
தூக்கி தூக்கி போடும்
என்னிருக்கையில் அமருங்களென்று
அவனுக்கு பின்னால்
அவள் அமருகையில்
நிச்சயம் அவனுக்கும்
தூக்கிதான் போட்டிருக்கும்*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (17-Apr-16, 6:27 pm)
Tanglish : koocham
பார்வை : 140

மேலே