மனிதம் எதுவரை

கீச்... கீச்..
மின்கம்பங்களின் நடுவே...
ஒற்றை மின்கம்பியில்...
உல்லாசமாய்...
ஊஞ்சலாடி கொண்டு...
கச்சேரி நடத்தும்...
அந்த கரிச்சான் குருவி...

காலடியில்...
காலன் பற்றி...
கணமேதும்...
கவலையில்லாமல்...
நிச்சலனமான...
நிசப்த...
மோனத்தில்...
காற்றின்...
அசைவுக்கேற்ப...
காலை மாற்றி கொண்டு...
ஒய்யாரமாய்...
உட்கார்ந்திருக்கும்...
ஒற்றை குருவி...

பார்க்கும் எனக்கு...
பதைபதைப்பு...
சிறகு பட்டு...
கருகி விடுமோ... என்று...
கைத்தட்டி விரட்ட...
குறுநகையோடு ...
அலட்சியமாய்
என்னை பார்த்து...
சிறு உடலை...
சற்றே உயர்த்தி...
சோம்பலாய் சிறகை விரித்து...
மெதுவாய் வட்டமிட்டு...
மேலே உயர்ந்து...
சிறு புள்ளியாய்.....

மேலிருந்து கரிச்சான்...
வீசிய...
விந்தையான...
வினா...
விஸ்வரூபமெடுத்து...
என் முன்னே...?

"உன்னை சுற்றி...
உன் உலகம்...
மாய வலையில்...
மனிதம் இழந்து...
மண்ணோடு மண்ணாக...
மக்கி கொண்டிருக்க...

சிற்றுயிர் என்னை...
காக்க...
சிந்தை கொண்டு...
விழைந்தாயே...
விந்தையிலும் விந்தை....
மனிதனிடம்....
மனிதம்...
மரிக்காமல்...
உள்ளதா?"
கேள்வியில் கரைந்து...
கரையேற திணறினேன்...

காரின் கண்ணாடியை...
தட்டும் ஓசையில்...
கலைந்து..
பார்த்தேன்....
பரட்டை.. குழந்தை...
பற்றி எரியும்...
உச்சி வெயிலில்...
தீ கக்கும்...
தார் சாலை..
.
உருகி வழிந்து
விடுமோ.. .
அந்த...
பச்சிளம் மேனி...
கண்ணில் தெரிந்த...
பசி...
அனலாய்...
என் அடி நெஞ்சின் ஆழத்தில்...

பையிலிருந்த பத்து ரூபாய்...
இடம் மாற...
பதவிசாய்...
நகர்ந்தது...
அந்த பசும்பொன்...
பக்கத்து...
வாகனத்தை...
பார்த்து...

உள்ளிருந்து...
ஒரு...
குழந்தை...
உற்சாகமாய்...
கையாட்ட...
ஏக்கம் வழியும்...
விழிகளோடு...
கையாட்டி...
உடனே...
கை நீட்டியது...
பிச்சை கேட்டு...
அந்த...
பிள்ளை நிலா...

என் வாகனம்...
முன்னோக்கி...
விரைய...
இன்ப -த்திற்கு
இரக்கமில்லையோ?....
துன்பமே...
துணையாய் …
கையேந்திய...
சிட்டு...
கண்ணிலிருந்து...
மறைய... மறைய ...

"சில்" என்ற...
ஏ.சி குளிரில் ....
மாபெரும்...
கடனாற்றிய...
களைப்பில்...
கம்பளி போர்த்தி...
கண்ணயர்ந்தது...
என்...
மனிதம்...

மனமெங்கும்...
"கீச்...கீச்..."
கரிச்சானின்...
கச்சேரி...

கடைகண்ணோர...
கண்ணீர் துளியில்...
என்...
கையாலாகாத்தனம்.... ஆனந்த்.வி

எழுதியவர் : ஆனந்த் வி (17-Apr-16, 8:47 pm)
Tanglish : manitham Ethuvarai
பார்வை : 533

மேலே