சுட்டெரிக்கும் சூரியனே
சுட்டெரிக்கும் சூரியனேசுடரொளி குறைப்பாயா
நித்தம் மக்கள் அவதியுறுகிறோம் கருணை காப்பாயா
உக்கிரம் குறைப்பாயா உயிர்களின் நலம் கண்டு
உன் கதிர்களை சுருக்கு கதிரவனே உன்னிடம் மன்றாடுகிறேன்
அவதியில் உதிர்ந்த என் வார்த்தைகளுக்கு நீ தந்தாய் பதில்
ஏளனமாய் என்னைப் பார்த்துகேலிச் சிரிப்பை வீசினாய்
காரணம் நீ அறிவாய் தெரியாதவன் போல் நடிக்காதே என்று
விளங்கவில்லை என் வேண்டுதலுக்கு நீ அளித்த பதில்
தெளிவுற விளக்குவாயா என் வேண்டுகோளுக்கு உன் பதிலை
கூறத்தொடங்கினாய் உன் கருத்தை
அல்ல அல்ல கொட்டித் தீர்த்தாய் உன் குமுறலை
இன்றைய புவியின் நிலைக்கு காரணத்தை நீ உறைத்தாய் இவ்வாறு
சூரியக்கதிர்களை தடுத்து நிழல் தரும் மரங்களை அழித்தாய்
நவீன உலக சாட்சியான நச்சுப் புகையுமிலும் தொழிழகங்கள்
சொகுசாய் இடம் நகர வாகனங்கள் ஊதித்தள்ளும் கரியமில வாயுக்கள்
பிரியான் வாயுவை வெளித்தள்ளி சில்லிட ச்செய்யும் குளிரூட்டிகள்
இவையனைத்தும் பாதுகாப்புப் படலமாம் ஓசோனை க் கிழித்ததை
நீ அறியாமல் பிதற்றுகிறாயா என்னைத் தூற்றுகிறாயா
என்னிடம் வேண்டுவதை நிறுத்துஉன் தவறை திருத்து
இனி நீ செய்ய வேண்டிய கடமை பல உண்டு புரிந்திடு என்றாய்
என்னிலடங்கா மரம் நடு இவை தடுக்கும் என் கதிர்களை
கரியமில வாயுக்களை இவைஉறிஞ்சி கொடுக்கும் தூய காற்றை
பசுமை படரும் புவி செழிக்கும் காற்று வீசும் வசந்தமாக
சாளரத்தை திறந்து வை காற்று தவளும் குளிரூட்டி தேவைப்படாது
மரத்தால் மழை பெருகும் மாதம் மும்மாரியும் பெய்யலாம்
நீரைச் சேமி நிலத்தடியில் அதன் மட்டத்தை உயர்த்து
புவியின் சூடு தனியும் உந்தன் வேண்டுதலும் பலிக்குமென்றாய்
உணர்ந்தேன் சூரியனே என் தவறைஇனி உன் சொல் நடப்பேன்