மெய் எழுத்து பிழையாய்

பிரம்மனின் தொழிலில்
பிழையான படைப்பு
திருநங்கைகள்

சமுதாயப் பார்வையில்
வெறுப்பாகிவிட்ட
வாழ்க்கை இவர்களது

கருணை கடவுள் திருமகளும்
கண் எடுத்தும் காணாத
காயங்கள் இவர்கள் மனதில்

திருமாலின் மோகினி அவதாரம்
திருநங்கை வடிவங்கள்
காக்க மறந்தவனின்
காவிய வார்ப்புகள் இவர்கள்

அழிக்க நினைக்கும்
அரக்கர்களுக்கு
அர்த்த நாரீஸ்வரராய்
அமைந்திடுவர் திருநங்கைகள்

அழகாக வடித்த கவிதையில்
'மெய்' எழுத்து பிழையாய்
திருநங்கைகள்

அறிவியலின் கண்டுபிடிப்பில்
மருத்துவத்தின் முன்னேற்றத்திலும்
தீராத பிரச்சினையாய்
இவர்கள் படைப்பு

எப்படி இருந்தாலும்
இப்படி ஒரு முன்னேற்றமா என
வியக்கும்
மனிதர்கள் கொண்ட
முனைப்பு...

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (18-Apr-16, 7:04 pm)
பார்வை : 69

மேலே