நீ இரசிக்கவேண்டும் சகாப்தமே -

தன் பிறப்பால் ஏழையாகி
தன் சிந்தனையால் தழைத்தோங்கி
தாய் நாட்டி ற்காக
தன்னையே தத்துக் கொடுத்து
அனுசக்திக்கு ஜனனம் தந்து
தரணிப்பார்வை தாய்நாட்டில் விழச்செய்து
இந்தியாவின் இணைஇல்லா திறமையை
இவ்வையத்திற்கு உணரச் செய்து
சாதிமதங் கடந்து ஒற்றுமையொழுகி
இந்தியாவிற்கு புகழாறம் படைத்து
இளையபாரதத்திற்கு தன்நம்பிக்கையை வித்திட்டு
கனவு கானச் செய்து
ஆற்றல் எண்ணங்களை ஒருங்கிணைத்து
சோதனைகளை வென்றுசாதனைப் படைத்து
இருளினிடையே கண்ட ஒளிமழையாய்
இந்தியரின் இதயத்தில் குடிகொண்டு
தன்நலம் தவிர்த்து தாய்நாட்டிற்காக
தன்னையே அற்பணித்த தலைவனே!!
நீகண்ட கணவெல்லாம் நனவாக
இந்தியாவை இவ்வையம் கண்டுவியக்க
பாரதத் தாய்மடியில் படுத்து
நீ இரசிக்கவேண்டும் சகாப்தமே.....

எழுதியவர் : காமேஷ்.வ (18-Apr-16, 9:33 pm)
பார்வை : 95

மேலே