கோடை விடுமுறை

“ கோடை விடுமுறை விட்டாச்சி
கொழந்தைங்க பறக்கிற சிட்டாச்சி
அவர் அவர் வசதிக்கு ஏற்றபடி
அதிசயப் பயணம் போயாச்சி ”

நீந்திப் பழகும் நீச்சள் குளம்
நிறைந்து வழியும் பொது ஜனம்
நீண்டு பரந்த கடற்கரை
யாண்டு நிலவும் மக்கள் தலை
சோகம் மறந்து,துன்பம் மறந்து
எல்லோரும் இங்கு ஒன்றே குலம் !

ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு
லூட்டி அடிக்க சிறப்பு ஏற்பாடு
சுற்றுலாத்துறையின் கைங்கரியம்
மட்டில்லா மகிழ்ச்சியை பகிர்ந்தளிக்கும்
திரும்பி வரவே மனம் விரும்பாது
ஆனால் திரும்பாமல் இருக்க முடியாது

இளம் கைகளை வெளியே நீட்டி,
இயற்கை அன்னைக்கு டாட்டா காட்டி
பிரியா விடைப்பெற்று திரும்புவோம்
திரும்பவும் வருவோமென முழங்குவோம்


நகர நெரிசலின் புழுக்கங்கள்
நகர மறுக்கும் வழித்தடங்கள்
காங்கிரீட் காடுகளின் கடும் வெப்பம்
காதை கிழிக்கும் தொடர் சத்தம்
அனைத்திலிருந்தும் தற்காலிக விடுதலை
அவரவர் கிராமப்புரங்களில் புது வாழ்க்கை
அந்த நாள் ஞாபகத்தில் அனைவரும் முழ்குவோம்
அந்த இனிய வாழ்வை எண்ணி மனம் குளிருவோம்

ஓடையில் நீந்தும் அன்னப்பறவை யாகலாம்
கிணற்றில் குதிக்கும் தவளையாக மாறலாம்
குளத்தில் துள்ளும் மீன்களாய் முழ்கலாம்
ஏரியில் மதகுகள் விட்டு மகிழலாம் !

நுங்கை திருடி உறிஞ்சலாம்
இளம்நீரை சீவி அருந்தலாம்
டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கலாம்
ஆரம்ப பள்ளியின் அழகை ரசிக்கலாம்
ஆலம் விழுதில் ஊஞ்சலாடலாம்
மாட்டு வண்டி ஓட்டி பழகலாம்
வாய்க்கா வரப்பில் ஓடலாம்
வயக்காட்டின் அழகை ரசிக்கலாம்
சொக்கட்டான், கபடி, கில்லி, கோலி, பம்பரம்,
கண்ணாமூச்சி, கோக்கோ,நொண்டி, பனைவண்டியென
ஒருநாளைக்கு ஒன்றாக விளையாடலாம்
உலகமே மறந்து ஊர் சுற்றலாம்!

எழுதியவர் : சாய்மாறன் (19-Apr-16, 7:59 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : kodai vidumurai
பார்வை : 117

மேலே