மர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணக்கதை

மர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணத்திற்கு அனுமனும் ஓர் காரணம் என்பது தெரியுமா?

நெடுங்காலமாக பல மர்மங்களை உள்ளடக்கிய பெர்முடா முக்கோணம் அமெரிக்காவின் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கடக்கும் போது மறையும் கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் என்ன ஆகின்றன என்பது இன்று வரை கண்டு பிடிக்க முடியாத மர்மங்களாகவே உள்ளது.

மேலும் இதுக்குறித்து பல கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. உங்களுக்கு ஒன்று தெரியுமா, இந்தியாவின் மிகவும் பிரபலமான காவியமான ராமாயணத்திலும், இந்த பெர்முடா முக்கோணம் குறித்த கதைகள் உள்ளன. அதுவும் அனுமனைக் கொல்ல முயற்சித்த அரக்கிக்கும், பெர்முடா முக்கோணத்திற்கும் தொடர்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமாயணக் காவியத்தில் ராவணன் சீதைக் கடத்திச் சென்றிருப்பார். சீதையைத் தேடி அனுமன் பறந்து கொண்டிருப்பார். அப்போது அவர் மூன்று பெரிய சோதனைகளைச் சந்திப்பார். அதில் மூன்றாவது சோதனை தான் சிம்ஹிகை என்னும் அரக்கி.

அரக்கி சிம்ஹிகை பிரம்மாவிடம் அனைவரது நிழலையும் அடக்கி ஆளும் வரத்தைப் பெற்றவள். இதனை இவளை யாரும் கடந்து செல்ல பயப்படுவார்கள். மேலும் சிம்ஹிகை மாயாஜாலங்களில் சிறந்தவள்.

ஒருமுறை அனுமன் கடலின் மேலே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது, சிம்ஹிகையின் இருந்த இடத்தைக் கடக்கும் போது, அனுமனின் வேகம் குறைந்தது. அனுமனும் யாரோ நம் வேகத்தைக் குறைப்பது போலவும், தன்மை திசைத் திருப்புவது போன்றும் உணர்ந்தார்.

அனுமன் தனது உருவத்தை சிறியதாக்கி, சிம்ஹிகையின் வாய்க்குள் நுழைந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார்.

அனுமனின் இந்த செயலால் அரக்கி சிம்ஹிகை பயந்து, இந்திய பெருங்கடலை விட்டு, யாருக்கும் தெரியாத இடத்திற்கு மாயமாகிவிட்டாள். இப்படி மாயமாகியிருக்கும் அந்த இடமாக பெர்முடா முக்கோணம் இருக்கக்கூடும் எனவும், அந்த அரக்கியால் தான் அப்பகுதியில் அமானுஷ்ய நடவடிக்கைகள் நடப்பதாகவும் நம்பப்படுகிறது.

ராமாயணத்தில் உள்ள மற்றொரு கதைக்கும், பெர்முடா முக்கோணத்திற்கும் சம்பந்தம் உள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவெனில் அனுமன் அரக்கர்களின் ராஜாவான ராவணனின் தொப்புளில் இருந்த மாணிக்கத்தை வைத்த இடமாக கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் உள்ள ராவணனிடம் திரவம் நிரம்பிய மாணிக்கம் ஒன்று உள்ளது. இந்த திரவம் வற்றினால் தான் ராவணன் மரணத்தை எய்துவான்.

இராமாயண போரின் போது, சிவன் ராவணனின் மனைவிடம் இந்த மாணிக்கத்தை தக்ஷிணையாக கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

ராவணனின் மரணத்திற்குப் பின், அனுமனிடம் இந்த மாணிக்கத்தை வழங்கி மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரிடத்தில் வைக்கும் படியான பொறுப்பு வழங்கப்பட்டது. அனுமனும் அதனை கடலின் ஒரு பகுதியில் யாருக்கும் தீங்கு விளைவிக்காதவாறு ஆழமான இடத்தில் வைத்தார். அந்த இடம் தான் தற்போது பெர்முடா முக்கோணமாக அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (19-Apr-16, 7:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 173

மேலே