நடை
பனிக்காற்றின் கரங்கள்
பரவித்தழுவும் அதிகாலை நேரம் .
புகையும் புழுதியும்
பொங்கத் தொடங்காத சூழல் !
நுரையீரல் சிலிர்த்துத் தளும்ப
வீதியில் இறங்கி நடந்தேன்
சப்தங்கள் கண்விழிக்காத
அமைதியின் திண்மை
நிரம்பி வழிந்தது !
இறுக்கம் வேண்டும் இளசுகள்
எடைகுறைக்கும் நடுவயதினர்
மருத்துவரின் அறிவுரைப்படி முதியவர்கள்
எல்லோரும் நடக்க
நானும் நடந்தேன்
மெல்லிய இசையை ரசித்தபடி !
மனிதர் மனங்களை நினைத்தபடி !

